தென்காசி, ஜூன் 1 –

சங்கரன்கோவிலில் ஊரடங்கை மீறி சுற்றிய 115 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.


தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பகுதியில் கொரோனா ஊரடங்கையொட்டி போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று ஊரடங்கை மீறி தேவையின்றி சுற்றித்திரிந்தவர்களின் 25 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும் தேவையின்றி சுற்றிய 115 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதனால் பலர் போலீசாரிடம் சிக்காமல்  ஓட்டம் பிடித்தனர். 

நிருபர் நெல்லை டுடே