தென்காசி,  ஜூன் 1 –

சுரண்டையில் தூய்மை பணியாளர்களுக்கு பழனி நாடார் எம்.எல்.ஏ. உணவு வழங்கினார்.

உலக பசியில்லா தினத்தை முன்னிட்டும், கொரோனா ஊரடங்கையொட்டியும் தென்காசி மாவட்டம்
சுரண்டை பேரூராட்சிக்கு உட்பட்ட தூய்மை பணியாளர்கள், மஸ்தூர் பணியாளர்களுக்கு பழனி நாடார் எம்.எல்.ஏ. மதிய உணவு வழங்கினார்.

நிகழ்ச்சியில் சுரண்டை  பேரூராட்சி  நிர்வாக அலுவலர் வெங்கட கோபு, நகர காங்கிரஸ் தலைவர் எஸ்.கே.டி.ஜெயபால், நகர தி.மு.க. செயலாளர் ஜெயபாலன், மாவட்ட பிரதிநிதி ஆறுமுகசாமி  மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

நிருபர் நெல்லை டுடே