தென்காசி, சூன்,  11
தென்காசி அருகே உள்ள இலத்துார் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கடையநல்லுார் சட்டமன்ற உறுப்பினா் செ.கிருஷ்ணமுரளி(எ)குட்டியப்பா நேரில் சென்று ஆய்வு செய்தார். 
மேலும் இலத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவ அலுவலா் டாக்டா் தமிழ்செல்வியிடம் மருத்துவமனை பணியாளா்களுக்கு தேவையான கொரோனா தடுப்பு முககவசம், மற்றும் கையுறைகளை வழங்கினார். 
அதனை தொடா்ந்து இலத்தூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தேவையான அத்தியாவசிய வசதிகள் மற்றும் தேவைகள் குறித்து கேட்டறிந்தார். மேலும் குடிநீர் வசதிக்காக தனது சொந்த செலவில் ஆழ்துளை அடிபம்பை உடனடியாக மாற்றி அதில் மின்மோட்டார் பொருத்தி குடிநீர் வசதி ஏற்படுத்த நடவடிக்கை எடுத்தார்.மேலும் சுகாதார நிலையத்திற்கு தேவையான அடிப்படை வசதிகள் வேண்டி எந்த நேரத்திலும் என்னை தொடா்பு கொள்ளலாம் என்றும் கூறினார்.  
இந்த நிகழ்ச்சியில் வட்டார சுகாதார மேற்பார்வையாளா் கதிரவன், செங்கோட்டை ஒன்றிய அதிமுக செயலாளா் ஆய்க்குடி கே.செல்லப்பன் செங்கோட்டை ஊராட்சி ஒன்றிய  முன்னாள் தலைவா் எல்ஐசி.முருகையா,   முன்னாள் மாவட்ட கவுன்சிலா் தாட்கோநகர் முருகேசன், ஆய்க்குடி பேரூர் கழகச்செயலாளா் முத்துக்குட்டி, ஆய்குடி சீதாஸ் மாரியப்பன்,  அதிமுக ஒன்றிய மாணவரணி செயலாளா் முருகேசன், மாவட்ட சிறுபாண்மை நலப்பிரிவு இணைச்செயலாளா் ஞானராஜ்  புளியறை செல்வராஜ், பேரூர் கழக வார்டு நிர்வாகிகள்  எஸ்வி கரை கந்தசாமி உள்பட பலா் கலந்து கொண்டனா். 

நிருபர் நெல்லை டுடே